மணிப்பூரில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்

மணிப்பூரில் முன்னாள் முதல்வர் ஓக்ரம் இபோபி தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் இன்று (வியாழக்கிழமை) உரிமை கோரியுள்ளது.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்


மணிப்பூரில் முன்னாள் முதல்வர் ஓக்ரம் இபோபி தலைமையில் ஆட்சியமைக்க காங்கிரஸ் இன்று (வியாழக்கிழமை) உரிமை கோரியுள்ளது.

மணிப்பூரில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் தலைவர்கள் இன்று அந்த மாநில ஆளுநர் நஜ்மா ஹெப்துல்லாவைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் சால்டன் அமோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"என். பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை சிறப்பு அமர்வைக் கூட்ட வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம். முன்னாள் முதல்வர் ஓக்ரம் இபோபி தலைமையில் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் மதச்சார்பற்ற அரசை அமைக்க காங்கிரஸிடம் போதிய பலம் உள்ளது என்று ஆளுநரிடம் தெரிவித்தோம்.. ஓக்ரம் இபோபி சிங் கையெழுத்திட்ட கடிதத்தையும் ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளோம்." என்றார். 

முன்னதாக, பாஜக எம்எல்ஏ-க்கள் 3 பேர் புதன்கிழமை இரவு காங்கிரஸ் கட்சிக்கு மாறினர். இதனிடையே, தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) அமைச்சர்கள் 4 பேர், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டி. ரோபிந்த்ரோ சிங் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ ஷஹாபுதின் ஆகியோர் பாஜகவுக்கு வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்றனர். இதனால், மணிப்பூரில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com