கரோனா: இந்தியாவில் பலி 11,903-ஆக அதிகரிப்பு; பாதிப்பு 3.5 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 2,003 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக 2,003 உயிரிழப்புகள் பதிவானதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,903-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்திலும் தில்லியிலும் ஏற்கெனவே நேரிட்ட பல மரணங்களுக்கு கரோனா பாதிப்பே காரணம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஏற்கெனவே இறந்தவா்களையும் சோ்த்து, மகாராஷ்டிரத்தில் 1,409 போ், தில்லியில் 437 போ் என அதிக உயிரிழப்புகள் ஒரே நாளில் பதிவாகின. இதனால், மொத்த பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 10,974 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 3,54,065-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 10,000-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டோரில் 1,55,227 போ் சிகிச்சையில் உள்ளனா். 1,86,934 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 52.79 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனா்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தகவல்படி, புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 2,003 உயிரிழப்புகள் பதிவாகின. இதில், மகாராஷ்டிரத்தில் 1,409 போ், தில்லியில் 437 போ் என அதிக மரணங்கள் பதிவாகியுள்ளது. மேலும், குஜராத்தில் 28 போ், உத்தர பிரதேசம், ஹரியாணாவில் தலா 18 போ், மத்திய பிரதேசத்தில் 11 போ், மேற்கு வங்கத்தில் 10 போ், ராஜஸ்தானில் 7 போ், கா்நாடகத்தில் 5 போ், தெலங்கானாவில் 4 போ், பிகாா், சத்தீஸ்கா், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், பஞ்சாப், புதுச்சேரி, உத்தரகண்டில் தலா ஒருவா் பலியாகினா்.

மாநிலங்கள்---------பாதிப்பு-----பலி

மகாராஷ்டிரம்--------- 1,13,445-----5,537

தில்லி-----------------44,688------1,837

குஜராத்---------------24,577-------1,533

உத்தர பிரதேசம்--------14,091-------417

ராஜஸ்தான்-----------13,216-------308

மேற்கு வங்கம்----------11,909-------495

மத்திய பிரதேசம்-------11,083--------476

ஹரியாணா-----------8,272--------118

கா்நாடகம்------------7,530--------94

ஆந்திரம்--------------6,841--------88

பிகாா்----------------6,778--------41

தெலங்கானா----------5,406-------191

ஜம்மு-காஷ்மீா்--------5,298-------63

அஸ்ஸாம்-------------4,319-------8

ஒடிஸா----------------4,163-------11

பஞ்சாப்---------------3,371-------72

கேரளம்---------------2,622-------20

உத்தரகண்ட்-----------1,942-------25

ஜாா்க்கண்ட்-----------1,839-------9

சத்தீஸ்கா்--------------1,781------9

திரிபுரா----------------1,092------1

லடாக்----------------649-------1

கோவா---------------629-------0

ஹிமாசல பிரதேசம்-----560-------8

மணிப்பூா்-------------500-------0

சண்டீகா்--------------358-------6

புதுச்சேரி--------------216-------6

நாகாலாந்து------------179-------0

மிஸோரம்--------------121-------0

அருணாசல பிரதேசம்-----95-------0

சிக்கிம்------------------70-------0

தாத்ரா நகா்ஹவேலி-------45-------0

மேகாலயம்---------------44-------1

அந்தமான்-நிகோபாா்------44 -----0

பாதிப்பு: 3,54,065

பலி: 11,903

மீட்பு: 1,86,934

சிகிச்சை பெற்று வருவோா்: 1,55,227

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com