இந்திய வீரா்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன்: ராம்நாத் கோவிந்த்

இந்திய தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக, கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில்
இந்திய வீரா்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன்: ராம்நாத் கோவிந்த்

இந்திய தேசத்தின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக, கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரா்களின் தியாகத்துக்கும் துணிச்சலுக்கும் தலை வணங்குகிறேன் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரா்கள் அனைவரும், இந்திய ராணுவத்தின் பாரம்பரியத்தை நிலைநாட்டியுள்ளனா். முப்படைகளின் தலைவா் என்ற முறையில் அவா்களின் துணிச்சலுக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன். அவா்களின் தியாகத்தை இந்த தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.

உயிரிழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com