வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கண்காணிக்க கர்நாடகாவில் பொதுமக்கள் குழு!

கரோனா தொற்றுகாலத்தில் மக்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கண்காணிக்க, கர்நாடகாவில் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட இருக்கிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரு: கரோனா தொற்றுகாலத்தில் மக்கள் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதைக் கண்காணிக்க, கர்நாடகாவில் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட இருக்கிறது.

இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறியதாவது:

கரோனா தொற்றுகாலத்தில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறையைக் கண்காணிக்க, தன்னார்வலர்களைக் கொண்ட பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட இருக்கிறது.

வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் நடைமுறையை செயல்படுத்த கர்நாடக மாநில அரசினால் உருவாக்கப்பட்ட மாநில அளவிலான செயல்திட்டக் குழு, இந்த முயற்சியை முன்னெடுக்கிறது. இதன்மூலம் தனிமைப்படுத்தும் நடைமுறையானது வாக்குச்சாவடி அளவில் தீவிரமாக கண்காணிக்கப்படும்.

அதன்படி வாக்குச்சாவடி மட்ட அலுவலர் ஒருவர் குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் கீழ் வரும் 300 முதல் 500 வீடுகளை கண்காணிப்பார். இவருக்கு கீழ் செயல்படும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவரது கண்காணிப்பின் கீழ் 50 முதல் 100 வீடுகள் வரை இருக்கும்.

அந்த உறுப்பினர் குறிப்பிட்ட வீடுகளில் தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பார். அத்துடன் தனது கண்காணிப்பிற்கு கீழ் வரும் வீடுகளுக்கு புதிதாக யாரேனும் வருகிறார்களா என்பதைக் கண்காணித்து, ஏதேனும் சிக்கல்கள் என்றால் வாக்குச்சாவடி மட்ட அலுவலருக்கு தகவல் கொடுப்பார்.

ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் யாராக இருந்தாலும் பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தங்களது தகவல்களை அதற்கென உள்ள இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com