அயோத்தியில் ராமர் கோயில்: பூமி பூஜை திடீர் ஒத்திவைப்பு

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அயோத்யா: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் சர்ச்சைக்குள்பட்டிருந்த 2.77 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக "ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை' அமைக்கப்பட்டது. அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்ய கோபால்தாஸ் நியமிக்கப்பட்டார். சம்பத் ராய் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அயோத்தியில் தற்போதுள்ள ராமர் கோயில் பகுதியில் கடந்த மாதம் 11-ஆம் தேதியிலிருந்து நிலத்தைச் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜையுடன் ஜூலை 2-ஆம் தேதி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை திடீர் என்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறக்கட்டளையின் செயலாளரான சம்பத் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் பாதுகாப்பே மற்ற எல்லா விஷயங்களை விடவும் முக்கியமானதாகும். எனவே இந்தியா மற்றும் சீனா இடையே எல்லைப்பகுதியில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த பூமி பூஜை ஒத்திவைக்கப்படுகிறது. மற்ற விஷயங்களையும் கணக்கில் கொண்டு ஆராய்ந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும். எல்லையில் உயிரிழந்த நமது வீரர்களுக்கு எங்களது அஞ்சலியை செலுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தேர்விகப்பட்டுள்ளது.

அதேநேரம் கட்டுமானப் பணிகள் தொடர்பாக முழுமையாக அறிந்து கொள்ள எதுவாக வியாழனன்று அறக்கட்டளைக்கான இணையதளம் ஒன்றும் துவக்கி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com