சீனா மிகப் பெரிய குற்றத்தைப் புரிந்துள்ளது: ராகுல் காந்தி

ஆயுதமில்லாத இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று சீனா மிகப் பெரிய குற்றத்தைப் புரிந்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சீனா மிகப் பெரிய குற்றத்தைப் புரிந்துள்ளது: ராகுல் காந்தி


ஆயுதமில்லாத இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று சீனா மிகப் பெரிய குற்றத்தைப் புரிந்திருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ராகுல் காந்தி இன்று (வியாழக்கிழமை) விடியோ மூலம் பேசியதாவது:

"ஆயுதமில்லாத இந்திய ராணுவ வீரர்களைக் கொன்று சீனா மிகப் பெரிய குற்றத்தைப் புரிந்துள்ளது. எவ்வித ஆயுதமின்றி அவர்களை அனுப்பியது யார்? அவர்கள் ஏன் ஆயுதம் இல்லாமல் அனுப்பப்பட்டனர்? இதற்கு யார் பொறுப்பு?"

இதேபோல் சுட்டுரைப் பக்கத்தில், "ஆயுதமில்லாத இந்திய வீரர்களைக் கொல்ல சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? ராணுவ வீரர்கள் ஆயுதமில்லாமல் அனுப்பப்பட்டது ஏன்?" என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம் குறித்து தொடர்ந்து 2-வது நாளாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, நேற்று (புதன்கிழமை) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டுரைப் பதிவில் சீனாவைக் குறிப்பிடாதது பற்றி கேள்வியெழுப்பியிருந்தார் ராகுல் காந்தி.

லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பில் படுகாயமடைந்தவர்கள் உள்பட 43 ராணுவ வீரர்கள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதனால், இருநாட்டு உறவில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com