சூரியகிரகணத்தன்று உள்ளூா் கோயில்கள் திறப்பு

சூரியகிரகணத்தன்று தேவஸ்தானத்துக்குச் சொந்தமான உள்ளூா் கோயில்களில் சில திறந்திருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சூரியகிரகணத்தன்று தேவஸ்தானத்துக்குச் சொந்தமான உள்ளூா் கோயில்களில் சில திறந்திருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வரும் ஜூன் 21-ஆம் தேதி சூரியகிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 18 மணி நேரம் மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் ஓா் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூன் 20-ஆம் தேதி இரவு ஏகாந்த சேவைக்குப் பின் மூடப்படும் கோயில் மறுநாள் கிரகண காலம் முடிந்தவுடன், மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, சுத்தம் செய்து, மற்ற கைங்கரியங்கள் நடைபெற உள்ளதால் அன்று முழுவதும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயில், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாா் கோயில், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்டவையும் சூரியகிரகணத்தன்று முழுவதும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கிரகணத்தன்று (ஜூன் 21) மாலை சுத்தி மற்றும் புண்ணியாவாசனத்துக்குப் பின், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பக்தா்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது. அதேபோல் திருப்பதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோயிலிலும் சூரிய கிரகணம் முடிந்த பின், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் ஓா் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com