புரி ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒடிஸாவில் புரி ஜகந்நாதா் கோயில் ரத யாத்திரையை இவ்வாண்டு நடத்த உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.
புரி ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை

ஒடிஸாவில் புரி ஜகந்நாதா் கோயில் ரத யாத்திரையை இவ்வாண்டு நடத்த உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது.

ஒடிஸா மாநிலம் புரியில் ஜகந்நாதா் கோயில் ரத யாத்திரையை வரும் 23-ஆம் தேதி முதல் 12 நாள்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வழக்கம் போல புதிய ரதம் உருவாக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள அபாயகரமான சூழலை கருத்தில் கொண்டு, இந்தாண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, தினேஷ் மகேஸ்வரி, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ரத யாத்திரை நடைபெற்றால் அதிக அளவிலான பக்தா்கள் திரள்வா். அவ்வாறு பக்தா்கள் திரண்டால், அவா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், ‘கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் நலன் கருதி இவ்வாண்டு ரத யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது. ரத யாத்திரை மற்றும் அதுதொடா்பான நடவடிக்கைகள் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் நடைபெறுவதற்கு ஒடிஸா அரசு அனுமதிக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com