தில்லிக்கு மட்டும் தனிமைப்படுத்துவதில் தனி விதி ஏன்? கேஜரிவால் கேள்வி

தில்லிக்கு மட்டும் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் தனி விதிமுறை ஏன் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
தில்லிக்கு மட்டும் தனிமைப்படுத்துவதில் தனி விதி ஏன்? கேஜரிவால் கேள்வி


தில்லிக்கு மட்டும் கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் தனி விதிமுறை ஏன் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக, தில்லியில் கரோனா உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாதவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் முறையை உடனடியாக தடை செய்து விட்டு கட்டாயம் ஐந்து நாள்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து கண்காணிக்க வேண்டும் என்று தில்லி ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தில்லியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மைக் கூட்டத்தில் பேசுகையில், நாடு முழுவதும் கரோனா உறுதி செய்யப்பட்டு எந்த அறிகுறியும் இல்லாதவர்களை வீட்டிலேயே வைத்து தனிமைப்படுத்தலாம் என்று ஐசிஎம்ஆர் அனுமதி அளித்திருக்கும் நிலையில், தில்லியில் மற்றும் அந்த விதியை மாற்றுவது ஏன்?

ஏற்கனவே, தில்லியில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவும் நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டவர்களை வைத்திருக்கும் மையங்களுக்கும் மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் எவ்வாறு ஒதுக்க முடியும்.

ரயில்வேயிடம் இருந்து பெட்டிளை வாங்கினாலும், இந்த கடுமையான வெப்பத்தில் அதில் யார் தங்கியிருக்க ஒப்புக் கொள்வார்கள் என்று கேஜரிவால் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com