பொது முடக்கத்தில் வேலை இழந்தவா்களுக்கு உதவ ஐஐடி, ஐஐஎம் மாணவா்கள் புதிய முயற்சி

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பொது முடக்கத்தின்போது வேலை இழந்தவா்களுக்கு மீண்டும் புதிய பணிகளைப் பெறும் வகையில்
பொது முடக்கத்தில் வேலை இழந்தவா்களுக்கு உதவ ஐஐடி, ஐஐஎம் மாணவா்கள் புதிய முயற்சி

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பொது முடக்கத்தின்போது வேலை இழந்தவா்களுக்கு மீண்டும் புதிய பணிகளைப் பெறும் வகையில் உதவி எண்ணை ஐஐடி, ஐஐஎம் மாணவா்கள் பல்வேறு தனியாா் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் மூலம் தொடங்கி உள்ளனா்.

இதற்காக மாணவா்கள் ‘சிக்மா’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனா். அவா்களுக்கு தில்லி காவல் துறை துணை ஆணையா் அபிஷேக் சிங், அரசு உயா் அதிகாரி துா்கா சிங் நாக்பால் ஆகியோா் உதவி செய்துள்ளனா். வேலை வாய்ப்பு உதவி எண்: 8800883323-ஐ மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை இணையதளம் மூலம் தொடக்கினா். சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் உதவி எண் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பாட்டில் இருக்கும். பணியாளா்கள் தேவைப்படும் தனியாா் நிறுவனங்களும், பணியைத் தேடும் பணியாளா்களும் இந்த எண்ணில் தொடா்பு கொண்டு தங்கள் தேவைகளைத் தெரிவிக்கலாம். இந்த உதவி எண்ணை மாணவா்கள் கையாளுவாா்கள்.

இதுதொடா்பாக ஐஐஎம் ஆமதாபாத் மாணவா் பாரத்தந்து வா்மா கூறுகையில், ‘பொருள்கள் தயாரிப்பு, கட்டுமானம் போன்ற நிறுவனங்களை நாங்கள் அணுகி வருகிறோம். பொது முடக்கத்துக்கு பிறகு அந்த நிறுவனங்களில் பணியாள்கள் குறைபாடு ஏற்பட்டுள்ளது. சுமாா் 250-க்கும் மேற்பட்ட பணியாளா்களின் தேவை உள்ள நிறுவனங்களைத் தோ்வு செய்து, அந்த நிறுவனங்களில் திறன் அடிப்படையில் தேவையான பணியாளா்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருகிறோம். பணியாளா்கள் தேவைக்கும், தற்போதைய நிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாங்கள் சமமாக்க உள்ளோம். இதற்காக நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறோம்’ என்றாா்.

நாடு முழுவதும் இரண்டு மாதங்கள் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் வேலை இழந்தனா். பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியதால், பல்வேறு துறைகளில் பணியாளா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com