நேற்று ஒரே நாளில் 1.87 லட்சம் கரோனா பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்

நாட்டில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,933 ஆக உயர்ந்து, மொத்த பாதிப்பு 4.40 லட்சத்தை எட்டியுள்ளது.
ஜூன் 22-ம் தேதி வரை 71,37,716 மாதிரிகள் கரோனா பரிசோதனை.
ஜூன் 22-ம் தேதி வரை 71,37,716 மாதிரிகள் கரோனா பரிசோதனை.

நாட்டில் நேற்று ஒரே நாளில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,933 ஆக உயர்ந்து, மொத்த பாதிப்பு 4.40 லட்சத்தை எட்டியுள்ளது.

செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 312 போ் உயிரிழந்தனா். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஜூன் 22-ம் தேதி வரை 71,37,716 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், நேற்று ஒரே நாளில் 1,87,223 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2,48,190 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இப்போது 1,78,014 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 

நாட்டில் தொடர்ந்து 12-வது நாளாக கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டியது. 

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,35,796 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,283 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் தில்லியில் 62,655 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் இதுவரை 2,233 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 62,087 பேர் கரோனா பாதித்துள்ளனர். இவர்களில் 794 பேர் பலியாகினர்.

அமெரிக்கா, பிரேசில், ரஷியாவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com