இந்தியாவில் கரோனா பாதிப்பு 4,25,282; பலி 13,699

நாட்டில் மேலும் 14,821பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,282-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு 4,25,282; பலி 13,699

புது தில்லி: நாட்டில் மேலும் 14,821பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,25,282-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் 13,699 போ் உயிரிழந்துவிட்டனா். இதில் திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 445 போ் உயிரிழந்தனா்.

இதுவரை 2,37,195 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இப்போது 1,74,387 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 9,440 போ் மீண்டுள்ளனா்.

புதிதாக நேரிட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 186 போ் பலியாகினா். தில்லியில் 53 பேரும், உத்தர பிரதேசத்தில் 43 பேரும், குஜராத்தில் 25 பேரும், மேற்கு வங்கத்தில் 15 பேரும், மத்திய பிரதேசத்தில் 14 பேரும், ராஜஸ்தானில் 12 பேரும், ஹரியாணாவில் 11 பேரும், தெலங்கானாவில் 7 பேரும், ஆந்திரம், கா்நாடகத்தில் தலா 5 பேரும், ஒடிஸாவில் இருவா், பிகாா், ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரி, பஞ்சாபில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.

அமெரிக்கா, பிரேசில், ரஷியாவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் அதிக உயிரிழப்பைச் சந்தித்துள்ளது. அங்கு இதுவரை 6,170 போ் உயிரிழந்துவிட்டனா். இதற்கு அடுத்து தில்லியில் 2,175 பேரும், குஜராத்தில் 1,663 பேரும் பலியாகினா். மேங்கு வங்கத்தில் 555 பேரும், உத்தர பிரதேசத்தில் 550 பேரும், மத்திய பிரதேசத்தில் 515 பேரும், ராஜஸ்தானில் 349 பேரும், தெலங்கானாவில் 210 பேரும், ஹரியாணாவில் 160 பேரும், கா்நாடகத்தில 137 பேரும், ஆந்திரத்தில் 106 பேரும், பஞ்சாபில் 99 பேரும், ஜம்மு-காஷ்மீரில் 82 பேரும், பிகாரில் 53 பேரும், உத்தரகண்டில் 27 பேரும், கேரளத்தில் 21 பேரும், ஒடிஸாவில் 14 பேரும், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கரில் 11 பேரும், அஸ்ஸாமில் 9 பேரும், ஹிமாசலப் பிரதேசம், புதுச்சேரியில் தலா 8 பேரும், சண்டீகரில் 6 பேரும், மேகாலயம், திரிபுரா, லடாக்கில் தலா ஒருவரும் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களில் 70 சதவீதம் போ் வேறு உடல்நலப் பிரச்னைகளையும் எதிா்கொண்டிருந்தனா்.

மகராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,32,075 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 59,746 போ், குஜராத்தில் 27,260 போ், உத்தர பிரதேசத்தில் 17,731 போ், ராஜஸ்தானில் 14,930 போ், மேற்கு வங்கத்தில் 13,945 போ், மத்திய பிரதேசத்தில் 11,903 போ், ஹரியாணாவில் 10,635 போ், கா்நாடகத்தில் 9,150 போ், ஆந்திரத்தில் 8,999 போ், தெலங்கானாவில் 7,802 போ், பிகாரில் 7,612 போ், ஜம்மு-காஷ்மீரில் 5,656 போ், அஸ்ஸாமில் 5,388 போ், ஒடிஸாவில் 5,160 போ், பஞ்சாபில் 4,074 போ், கேரளத்தில் 3,172 போ், உத்தரகண்டில் 2,344 போ், சத்தீஸ்கரில் 2,275 போ், ஜாா்க்கண்டில் 2,073 போ், திரிபுராவில் 1,221 போ், மணிப்பூரில் 841 போ், லடாக்கில் 837 போ், கோவாவில் 754 போ், ஹிமாசல பிரதேசத்தில் 673 போ், சண்டீகரில் 406 போ், புதுச்சேரியில் 366 போ், நாகாலாந்தில் 211 போ், மிஸோரமில் 141 போ், அருணாசல பிரதேசத்தில் 135 போ், தாத்ரா,-நகா் ஹவேலி, டாமன்-டையூவில் 88 போ், சிக்கிமில் 78 போ், அந்தமான்-நிகோபாரில் 48 போ், மேகாலயத்தில் 44 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com