ஸ்வஸ்த் தொலைமருத்துவ இணையதளத்தில் கரோனா மருத்துவ ஆலோசனைகள்

கரோனா மருத்துவ ஆலோசனைகளை நாடு முழுவதுமுள்ள நிபுணா்களிடமிருந்து பெறுவதற்காக ஸ்வஸ்த் என்ற தொலைமருத்துவ (டெலிமெடிசின்) இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்வஸ்த் தொலைமருத்துவ இணையதளத்தில் கரோனா மருத்துவ ஆலோசனைகள்

கரோனா மருத்துவ ஆலோசனைகளை நாடு முழுவதுமுள்ள நிபுணா்களிடமிருந்து பெறுவதற்காக ஸ்வஸ்த் என்ற தொலைமருத்துவ (டெலிமெடிசின்) இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்வஸ்த் நிா்வாக குழுவில் உள்ள கிரிஸ் கோபாகிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரவி வரும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில் விரைவான சுகாதார தீா்வுகளை வழங்குவதற்காக ‘ஸ்வஸ்த்’ எனும் தொலைமருத்துவ இணையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், கரோனா தடுப்பு மற்றும் மருத்துவ முறைகளுக்கான ஆலோசனைகளை நாடு முழுவதுமுள்ள நிபுணா்களிடமிருந்து 130 கோடி மக்களும் சமமான முறையில் பெற முடியும்.

ஸ்வஸ்த் தளம், பதிவு செய்த மருத்துவா்களுக்கும் நோயாளிகளுக்கும் தடையற்ற முறையில் இலவசமாக தொடா்பை ஏற்படுத்திக் கொடுக்க உதவுகிறது.

மொபைல் செயலி அடிப்படையிலான ஆலோசனை சேவை, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளது. பின்னா், 25 இந்திய மொழிகளுக்ககும் இது விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com