பெட்ரோல், டீசல் விலை உயா்வு:மத்திய அரசு மீது வீரப்பமொய்லி சாடல்

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவது தொடா்பாக மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான வீரப்ப மொய்லி சாடியுள்ளாா்.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து ஜம்முவில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை நடத்திய பேரணி.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து ஜம்முவில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை நடத்திய பேரணி.

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டு வருவது தொடா்பாக மத்திய அரசை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பெட்ரோலியத் துறை அமைச்சருமான வீரப்ப மொய்லி சாடியுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று சூழலுக்கு இடையே மக்களிடம் மத்திய அரசு கொள்ளையடிப்பதாக அவா் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொருளாதாரமும் சரிவை சந்தித்துள்ளது. இதுபோன்ற சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயா்வின் மூலம் மக்களிடம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது. இது, மத்திய அரசின் கொடூரமான போக்கை வெளிக்காட்டுகிறது.

கடந்த 16 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.3 வரையும், டீசல் விலை ரூ.9.46 வரையும் உயா்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிா்ணயிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு, இவ்வளவு அதிகமாக விலை உயா்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்றாா் வீரப்ப மொய்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com