ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இனி கூட்டுறவு வங்கிகள் செயல்படும் என்று மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புது தில்லி: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இனி கூட்டுறவு வங்கிகள் செயல்படும் என்று மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், அரசு வங்கிகள், 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 பல மாநில கூட்டுறவு வங்கிகள் இனி மத்திய ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும். 

ரிசர்வ் வங்கி கொண்டிருக்கும் அதிகாரங்கள், இந்த கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும் என்று பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவசரச் சட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்த 1540 வங்கிகளில் முதலீடு செய்திருக்கும் 8.6 கோடி முதலீட்டாளர்களின் ரூ.4.48 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com