கர்நாடகத்தில் கரோனா பாதித்த ரிசர்வ் படைக் காவலர் தற்கொலை

கர்நாடக மாநில ரிசர்வ் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
corona test
corona test


பெங்களூரு: கர்நாடக மாநில ரிசர்வ் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கர்நாடக மாநில ரிசர்வ் படைப் பிரிவுகளின் தளபதி உள்பட 50-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் அலோக் குமார் கூறுகையில், 50 வயது தலைமைக் காவலருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வாகனத்திலேயே கயிற்றால் கழுத்தை நெறித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கர்நாடக மாநில ரிசர்வ் படையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் உள்பட இந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com