கரோனா பாதிப்பு: திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உயிரிழப்பு; முதல்வர் மம்தா இரங்கல்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 
திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ்
திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ்

கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

மேற்குவங்க மாநிலம் தெற்கு 24-பர்கனாஸ் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  தமோனாஷ் கோஷ்(60)-க்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, அவருக்கு இதயக்கோளாறு, சிறுநீரகப் பிரச்னை இருந்துள்ளது. உடல் உறுப்புகள் செயலிழந்து இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் தனிமைப்படுத்தலில் உள்ளதாக கூறப்படுகிறது. 

கோஷின் மரணம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். 'கோஷ் உயிரிழந்தது மிகவும் வருத்தமாக இருக்கிறது. 1998 முதல் ஃபால்டா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ. மற்றும் கட்சி பொருளாளராகப் பணியாற்றியுள்ளார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்கள் மற்றும் கட்சிக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார், சமூகப் பணிகளிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது இடத்தை நிரப்புவது மிகக்கடினம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்' எனப் பதிவிட்டுள்ளார். 

மேற்குவங்க அமைச்சர் சுஜித் போஸூம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com