பிகாரில் இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலி

பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.  
பிகாரில் மழை வெள்ளம்
பிகாரில் மழை வெள்ளம்

பாட்னா: பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி ஜெனமணி  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் மூன்று நாட்களில் அஸ்ஸாம். மேகாலயா, அருணாச்சல் பிரதேசம், பிகார், இமயமலைப் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் நாங்கள் ஏற்கனவே மத்திய மற்றும் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.  

ஏற்கனவே பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 22 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. பலியானவர்களில் பெரும்பாலானோர் வயல்வெளிகளில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள்தான்.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிகார் அரசானது மழை வெள்ளத்தின் காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் இருப்பதால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com