தில்லியில் 3,390 பேர், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கு கரோனா

தில்லியில் 3,390 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் 3,390 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
தில்லியில் 3,390 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)


தில்லியில் 3,390 பேருக்கும், மகாராஷ்டிரத்தில் 4,841 பேருக்கும் கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலங்கள் மகாராஷ்டிரம் மற்றும் தில்லி. அங்கு கரோனா தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

தில்லி:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,390 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 64 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 73,780 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,429 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,328 பேர் குணமடைந்ததையடுத்து, மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 44,765 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் 26,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 4,841 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 192 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் 3,661 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 63,342 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 6,931 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 77,453 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு இறப்பு விகிதம் 4.69% ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com