என் உயிரைக் காப்பாற்றுங்கள்: குடியரசுத்தலைவருக்கு குஜராத் எம்.எல்.ஏ கடிதம்!

என் உயிருக்கு ஆபத்து உள்ளது; என்னைக் காப்பாற்றுங்கள் என்று  குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு குஜராத் எம்.எல்.ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
சோட்டுபாய் வாசவா
சோட்டுபாய் வாசவா

காந்திநகர்: என் உயிருக்கு ஆபத்து உள்ளது; என்னைக் காப்பாற்றுங்கள் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு குஜராத் எம்.எல்.ஏ ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

குஜராத் மாநிலம் ஜகாதியா தொகுதி எம்.எல்.ஏவாக இருப்பவர் பாரதிய பழங்குடியினர் கட்சியின் தலைவரான சோட்டுபாய் வாசவா. இவரது மகன் தேடியபாதா தொகுதி எம்.எல்.ஏவான மகேஷ் வாசவா. குஜராத்தில் கடந்த வெள்ளியன்று நான்கு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்காவது இடத்திற்கான போட்டி கடுமையாக இருந்ததால், இவர்கள் இருவரும் வாக்களிக்க வேண்டுமென ஆளும்கட்சியான பாஜக மற்றும் எதிர்கட்சியான் காங்கிரஸ் இரண்டும் விரும்பின. ஆனால் இவர்கள் இருவரும் ஓட்டெடுப்பில் பங்குபெறாமல் புறக்கணித்து விட்டனர்.

குஜராத்தில் பழங்குடியினர் நலன் இரு கட்சிகளாலும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாலும், அரசியல் சாசனப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுவதாலும் இத்தகைய முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.    

இந்நிலையில் என் உயிருக்கு ஆபத்து உள்ளது; என்னைக் காப்பாற்றுங்கள் என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு எம்.எல்.ஏ சோட்டுபாய் வாசவா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் தனது கடிதத்தில், குஜராத்தில் ஜாதிய ரீதியான பிளவு உச்ச கட்டத்தை அடைந்து வருவதாகவும், அதற்கு எதிராகத் தானும் தனது மகனும் தொடர்ந்து சமூக நீதிக்காக குரல் எழுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார். குஜராத்தில் அரசும் காவல்துறையும் சமூக விரோத சக்திகளுடன் கை கோர்த்துக் கொண்டு, போலி என்கவுண்டகளில் தங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களை தீர்த்துக் கட்டும் போக்கு அதிகரித்துக் காணப்படுகிறது. இதன்காரணமாக எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது; எனவே தக்க பாதுகாப்பு அளித்து எங்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்,  

முன்னதாக 2017-ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவும் இதே போல் வேண்டுகோளை அவர் முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com