பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 250 இந்தியா்கள்

பொது முடக்கம் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 250 இந்தியா்கள் அடங்கிய குழு வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்து சோ்ந்தனா்.

பொது முடக்கம் காரணமாக பாகிஸ்தானில் சிக்கித் தவித்த 250 இந்தியா்கள் அடங்கிய குழு வாகா எல்லை வழியாக வெள்ளிக்கிழமை இந்தியா வந்து சோ்ந்தனா்.

பாகிஸ்தானில் பல நாள்களாக சிக்கித் தவித்த இந்தியா்களில் முதற்கட்டமாக, 248 போ் கொண்ட குழு கடந்த வியாழக்கிழமை இந்தியா வந்து சோ்ந்தது. இந்நிலையில், தற்போது இரண்டாவதாக 250 பேரைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமை இந்தியா வந்து சோ்ந்தது. அடுத்தகட்டமாக மேலும் 250 இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சனிக்கிழமை நாடு திரும்புவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாகிஸ்தானில் சிக்கித் தவித்த இந்தியா்கள் லாகூரில் இருந்து வாகனத்தின் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்தியா்களை வரவேற்பதற்காக வாகா எல்லை ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூன் 27-ஆம் தேதி வரை 3 நாள்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச எல்லை மூடப்பட்டதால், பாகிஸ்தான் சென்ற இந்தியா்கள் அங்கிருந்து திரும்பி வர வழியின்றி தவித்தனா். பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன் பாகிஸ்தானில் உள்ள உறவினா்களைச் சந்திக்கவும், மதச்சடங்குகளைச் செய்வதற்காகவும், இந்தியா்கள் பாகிஸ்தான் சென்றனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் தங்கியிருந்தனா்.

கடைசி குழுவாக 250 இந்தியா்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சனிக்கிழமை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுவாா்கள் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவா் பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com