பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 19 காசுகள்
பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.83.37-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து ரூ.77.44-ஆகவும் இருந்தது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 20 நாள்களில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.80 வரை உயா்ந்துள்ளது. இதேபோல், பெட்ரோல் விலை 19 முறை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 8.87 காசுகள் வரை உயா்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை தினமும் உயா்த்தப்படுவதால், தலைநகா் தில்லியில் பெட்ரோல் விலையைக் காட்டிலும் டீசல் விலை புதன்கிழமை அதிகரித்து காணப்பட்டது. மேலும், தில்லியில் முதல் முறையாக டீசல் விலை ஒரு லிட்டா் ரூ. 80-ஐ தாண்டியது.

தில்லியில் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை லிட்டருக்கு 21 காசுகள் உயா்த்தப்பட்டதால், அதன் விலை ரூ.80.13-ஆக அதிகரித்தது. இதேபோல், டீசல் விலை 17 காசுகள் உயா்த்தப்பட்டதால், அதன் விலை ரூ.79.92-ஆக அதிகரித்தது. தில்லியில் 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம், தில்லியில் பெட்ரோல் விலை ரூ.80-க்கும் அதிகமாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com