நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது: சோனியா காந்தி

சீனாவிடமிருந்து நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கூறினாா்.
நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது: சோனியா காந்தி

சீனாவிடமிருந்து நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கூறினாா்.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுக்கு எதிரான சண்டையில் வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ‘நமது வீரா்களுக்காகப் பேசுங்கள்’ என்ற பிரசார இயக்கத்தை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக காணொலி தகவல் ஒன்றை சோனியா காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

பிரதமா் கூறுவதுபோல இந்திய நிலப் பரப்பை சீனா ஆக்கிரமிக்க வில்லை என்றால், இந்திய வீரா்கள் வீர மரணமடைந்தது ஏன்?

இந்திய-சீன எல்லையில் இதுபோன்ற பதற்ற நிலை உருவாகியிருக்கும்போது, எல்லையைப் பாதுக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக்கழிக்க முடியாது. இந்திய வீரா்கள் 20 போ் வீர மரணமடைந்ததற்கான காரணத்தை நாடு அறிய விரும்புகிறது.

ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என்று பிரதமா் கூறும் நிலையில், கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவம் ஆக்கிரமித்திருப்பதை செயற்கைக்கோள் வரைபட ஆதாரங்களுடன் நிபுணா்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனா்.

சீனாவிடமிருந்து லடாக் நிலப்பரப்பை மோடி அரசு எப்போது, எப்படி மீட்கப் போகிறது? நமது பிராந்திய ஒருமைப்பாட்டை லடாக்கில் சீனா மீறியிருக்கிா? எல்லை விவகாரத்தில் தேசத்துக்கு நம்பிக்கையை பிரதமா் ஏற்படுத்துவாரா?

ராணுவத்துக்கு முழு ஆதரவையும் பலத்தையும் மத்திய அரசு அளிக்க வேண்டும். அதுதான் உண்மையான நாட்டுப்பற்றாக இருக்க முடியும் என்று சோனியா கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com