குஜராத் முன்னாள் முதல்வருக்கு கரோனா தொற்று உறுதி

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா
குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா

குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த அவர் மருத்துவரின் அறிவுறுத்தலுக்கேற்ப இன்று காலை ஆமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடியும், வகேலாவை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

வகேலாவின் செய்தித் தொடர்பாளரான பார்த்தேஷ் படேல் கூறுகையில், 'வகேலா  நேற்று வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர். அவரது உடல்நிலை குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை. அவருக்கு நீரிழிவு போன்ற நோய்கள் எதுவும் இல்லை. உடல் ரீதியாக அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். எனினும் முன்னெச்சரிக்கையாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார். 

முதலில் பாஜகவில் இருந்த வகேலா, பின்னர் காங்கிரஸ், அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். 1996-97ல் குஜராத் முதல்வராக இருந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பாக, அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com