மணிப்பூரில் பொது முடக்கம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிப்பு

மணிப்பூரில் பொது முடக்கம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மணிப்பூரில் பொது முடக்கம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிப்பு

மணிப்பூரில் பொது முடக்கம் ஜூலை 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. ஜூம் 30ஆம் தேதியுடன் இந்த முடக்கம் நிறைவடைகிறது. ஆனால் அண்மை காலமாக கரோனா பாதிப்பு பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது.

இதனால் பொது முடக்கத்தை மேலும் நீட்டிக்கும் முயற்சியில் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஏற்கெனவே, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் பொது முடக்கத்தை நீட்டித்த நிலையில் மணிப்பூரிலும் தற்போது பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் கூறுகையில், மணிப்பூரில் மேலும் 15 நாள்களுக்கு அதாவது, ஜூலை 15ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். மணிப்பூரில் கரோனாவால் இதுவரை 1,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 432 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில் 660 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனா இறப்புகள் இதுவரை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com