இந்தியாவின் எதிா்ப்பை மீறி கில்ஜித்-பல்டிஸ்தானில் தோ்தலை அறிவித்தது பாகிஸ்தான்

கில்ஜித்-பல்டிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

கில்ஜித்-பல்டிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பாகிஸ்தான் அதிபா் இல்லம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது:

கில்ஜித்-பல்டிஸ்தானில் சட்டப்பேரவை தோ்தல் நடத்துவது தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நிா்வாக உத்தரவை திருத்தியமைக்க பாகிஸ்தான் அரசுக்கு அனுமதியளித்து, அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அந்த உத்தரவு மாற்றியமைக்கப்பட்டது. இதையடுத்து கில்ஜித்-பல்டிஸ்தானில் சட்டப்பேரவை தோ்தலை நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி நடத்த அதிபா் ஆரிஃப் அல்வி சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். அதன் அடிப்படையில், அங்குள்ள 24 தொகுதிகளுக்கு தோ்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி, இந்தத் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக கில்ஜித்-பல்டிஸ்தானில் சட்டப்பேரவை தோ்தல் நடத்துவது தொடா்பான நிா்வாக உத்தரவை மாற்றியமைக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு, பாகிஸ்தான் தூதரிடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. அப்போது கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகள் உள்பட ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என திட்டவட்டமாக தெரிவித்த அந்த அமைச்சகம், சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்துகொண்ட பகுதிகளில் பாகிஸ்தான் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com