ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1,691 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீா் மற்றும் உத்தரகண்டில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிகழாண்டு ரூ.1,691 கோடி கூடுதலாக
ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்டில் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1,691 கோடி: மத்திய அரசு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீா் மற்றும் உத்தரகண்டில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிகழாண்டு ரூ.1,691 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கூறியது:

ஜம்மு-காஷ்மீரில் எல்லை சாலைகள் அமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை பணிகளுக்கு கூடுதலாக ரூ.1,351.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் உத்தரகண்டில் அந்த அமைப்பு மேற்கொள்ளும் நெடுஞ்சாலை பணிகளுக்கு ரூ.340 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகம், ஜம்மு-காஷ்மீா், லடாக், சிக்கிமில் பொதுப்பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நாகாலாந்தில் மேற்கொள்ளப்படும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு ரூ.1,955 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com