பொதுமுடக்கம் முடிந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும்: பிரதமர் மோடி

பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 'மனதின் குரல்' வானொலி உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 

பொதுமுடக்கம் முடிவடைந்தாலும் நாம் கவனத்துடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மிக அவசியம். முகக்கவசம் அணியவில்லை என்றால், நீங்களும் உங்களை சுற்றியுள்ளவர்களும் ஆபத்தில் இருக்கிறீர்கள். எனவே, கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அனைத்து நாட்டு மக்களிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலரது ஊக்கமளிக்கும் கதைகளை நாம் கேட்டிருப்போம். உ.பி.யின் பராபங்கியில், வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் தனிமைப்படுத்தலின்போது, கல்யாணி ஆற்றின் பழைய இயற்கை நிலைமையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தனிமைப்படுத்தலில் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை மாற்றியமைக்க முற்படுவது பாராட்டத்தக்கது.

பீகாரைச் சேர்ந்த தியாகி குண்டன்குமாரின் தந்தை, எல்லைத் தாக்குதலில் தனது மகனை இழந்த நிலையில், நாட்டைப் பாதுகாப்பதற்காக தனது பேரன்களையும் ஆயுதப் படைகளுக்கு அனுப்புவேன் என்று கூறியுள்ளார். நாட்டின் பாதுக்கப்புக்காக பணியாற்றும் ஒவ்வொரு வீரருடைய குடும்பத்தினரின் எண்ணமும் இதுவாகத் தான் இருக்கிறது. அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com