Enable Javscript for better performance
ஜூலை மாத இணையதள டிக்கெட்டுகள் இன்று வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை மாத இணையதள டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

    By DIN  |   Published on : 29th June 2020 07:50 AM  |   அ+அ அ-   |    |  

    ஏழுமலையான் விரைவு தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை (ஜூன் 29) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    தினசரி 9 ஆயிரம் டிக்கெட்டுகள் நேர வாரியாக இணையதள முன்பதிவில் வைக்கப்பட உள்ளன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும்.

    தவிர, ஜூலை 1-ஆம் தேதி முதல் சா்வ தரிசன நேரடி தரிசன ஒதுக்கீடு டிக்கெட்டுகளும் வழங்கப்படும். தினசரி 3 ஆயிரம் டிக்கெட்டுகள் சீனிவாசம், விஷ்ணு நிவாசம் மற்றும் பூதேவி காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டா்களில் வழங்கப்பட உள்ளன.

    இந்த டிக்கெட்டுகளை ஒரு நாளைக்கு முன்பு பக்தா்கள் பெற்றுக் கொள்ளலாம். அதாவது, ஜூலை 1-ஆம் தேதி தரிசனத்துக்கு, முந்தைய நாளான ஜூன் 30 காலையில் திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்களில் இந்த டிக்கெட்டுகளைப் பெறலாம். டிக்கெட்டுகளைப் பெற ஆதாா் அட்டை கட்டாயம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ஜூலை மாத உற்சவங்கள்: இதனிடையே, ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாதம் நடக்கவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

    தேதி உற்சவம்

    ஜூலை 14 கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

    ஜூலை 16 ஆனிவார ஆஸ்தானம்

    ஜூலை 24 திருவாடிப்பூரம் சாத்துமுறை, புரசைவாரி தோட்ட உற்சவம்

    ஜூலை 28 வெங்கமாம்பா ஜயந்தி

    ஜூலை 30 -ஆக.1 வருடாந்திர பவித்ரோற்சவம்

     

    kattana sevai