ஆந்திர இ-பாஸ் பெற்றால் மட்டுமே ஆந்திரத்துக்கு அனுமதி

ஆந்திரத்தில் இ-பாஸ் பெற்றால் மட்டுமே ஆந்திராவிற்குள் வெளி மாநில வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படும் என்று ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆந்திரத்தில் இ-பாஸ் பெற்றால் மட்டுமே ஆந்திராவிற்குள் வெளி மாநில வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்படும் என்று ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநில எல்லைகளில் நுழைய நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு வருகிறது. நாட்டில் உள்ள இதர மாநிலங்களை காட்டிலும், ஆந்திராவில் கரோனா தொற்று கனிசமாக குறைந்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களிலிருந்து வரும் மக்களால் தொற்று பெருகுவதை தடுக்க ஆந்திர அரசு கடுமையான நிபந்தனைகளை அமல்படுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் தவிர்த்து, இதர வாகனங்கள் ஆந்திர மாநிலத்திற்குள் நுழைய வேண்டுமானால், ஆந்திர அரசின் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆந்திரத்தைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் கரோனா தொற்று அதிக அளவில் உள்ளதால், ஆந்திர டிஜிபி அலுவலகம் அளிக்கும் இ-பாஸ் இருந்தால் மட்டுமே வெளி மாநிலத்தவர்கள் ஆந்திராவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்று அம்மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com