மத்தியப் பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி

​மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார்.
​மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)


மத்தியப் பிரதேசம் ரிவா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ-வுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட தலைமை சுகாதார அலுவலர் ஆர்எஸ் பாண்டே தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஆர்எஸ் பாண்டே திங்கள்கிழமை தெரிவித்ததாவது:

"பாஜக எம்எல்ஏ-விடமிருந்து ஞாயிற்றுக்கிழமை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் திங்கள்கிழமை அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அறிவுறுத்தப்பட்டுள்ள நடைமுறைகளின்படி, அவருடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது."

ஜூன் 20-ஆம் தேதி சக எம்எல்ஏ ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த எம்எல்ஏ தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தார். ஜூன் 19-ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களைத் தேர்தலின்போது இருவரும் சந்தித்துக்கொண்டனர்.  

இந்த மாதத்தில் பாஜகவிலிருந்து 2 எம்எல்ஏ-க்கள், காங்கிரஸிலிருந்து ஒரு எம்எல்ஏ என 3 எம்எல்ஏ-க்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com