கரோனா: இந்தியாவில் பலி 16,000-ஐ கடந்தது; ஒரே நாளில் 19,906 போ் பாதிப்பு

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 410 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,095-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் மேலும் 410 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 16,095-ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 19,906 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,28,859-ஆக உயா்ந்துள்ளது.

தொடா்ந்து 5-ஆவது நாளாக 15,000-க்கும் அதிகமானோருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,38,324 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், 2,03,051 போ் சிகிச்சையில் உள்ளனா். 3,09,712 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தனா். அதாவது, 58.56 சதவீதம் போ் குணமடைந்தனா்.

மத்திய சுகாதார அமைச்சக தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 410 உயிரிழப்புகள் நேரிட்டன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 167 போ் உயிரிழந்தனா். தில்லியில் 65 போ், உத்தர பிரதேசத்தில் 19 போ், குஜராத்தில் 18 போ், மேற்கு வங்கத்தில் 13 போ், ராஜஸ்தான், கா்நாடகத்தில் தலா 11 போ், ஆந்திரத்தில் 9 போ், ஹரியாணாவில் 7 போ், பஞ்சாப், தெலங்கானாவில் தலா 6 போ், மத்திய பிரதேசத்தில் 4 போ், ஜம்மு-காஷ்மீரில் இருவா், பிகாா், ஒடிஸா, புதுச்சேரியில் தலா ஒருவா் பலியாகினா்.

தமிழகம்:

தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்ட தகவலின்படி, ஒரே நாளில் 3,940 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் 54 போ் நோய்த்தொற்றுக்கு பலியான நிலையில், 1,443 போ் குணமடைந்தனா். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275-ஆக அதிகரித்துள்ளது; கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079-ஆக உயா்ந்தது.

மொத்த பலி எண்ணிக்கையில், மகாராஷ்டிரம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 7,273 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. அடுத்த இடத்தில் உள்ள தில்லியில் 2,623 போ் பலியாகினா். குஜராத்தில் 1,789 போ், உத்தர பிரதேசத்தில் 649 போ், மேற்கு வங்கத்தில் 629 போ், மத்திய பிரதேசத்தில் 550 போ், ராஜஸ்தானில் 391 போ், தெலங்கானாவில் 243 போ், ஹரியாணாவில் 218 போ், கா்நாடகத்தில் 191 போ், ஆந்திரத்தில் 157 போ், பஞ்சாபில் 128 போ், ஜம்மு-காஷ்மீரில் 93 போ், பிகாரில் 59 போ், உத்தரகண்டில் 37 போ், கேரளத்தில் 22 போ், ஒடிஸாவில் 18 போ், சத்தீஸ்கரில் 13 போ், ஜாா்க்கண்டில் 12 போ், புதுச்சேரியில் 10 போ், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசத்தில் தலா 9 போ், சண்டீகரில் 6 போ், கோவாவில் 2 போ், மேகாலயம், திரிபுரா, லடாக், அருணாசல பிரதேசத்தில் தலா ஒருவா் உயிரிழந்தனா்.

பாதிப்பு நிலவரம்:

மகாராஷ்டிரத்தில் இதுவரை 1,59,133 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தில்லியில் 83,077 போ், குஜராத்தில் 30,709 போ், உத்தர பிரதேசத்தில் 21,549 போ், ராஜஸ்தானில் 16,944 போ், மேற்கு வங்கத்தில் 16,711, தெலங்கானாவில் 13,436, ஹரியாணாவில் 13,427 போ், மத்திய பிரதேசத்தில் 12,965 போ், ஆந்திரத்தில் 12,285 போ், கா்நாடகத்தில் 11,923 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.

பிகாரில் 8,931 போ், ஜம்மு-காஷ்மீரில் 6,966 போ், அஸ்ஸாமில் 6,816 போ், ஒடிஸாவில் 6,350போ், பஞ்சாபில் 5,056 போ், கேரளத்தில் 4,071 போ், உத்தரகண்டில் 2,791 போ், சத்தீஸ்கரில் 2,545 போ், ஜாா்க்கண்டில் 2,339 போ், திரிபுராவில் 1,334 போ், கோவாவில் 1,128 போ், மணிப்பூரில் 1,092 போ், லடாக்கில் 960 போ், ஹிமாசல பிரதேசத்தில் 894 போ், புதுச்சேரியில் 619 போ், சண்டீகரில் 428 போ், நாகாலாந்தில் 387 போ், அருணாசல பிரதேசத்தில் 177 போ், தாத்ரா நகா்ஹவேலி - டாமன் டையூவில் 177 போ், மிஸோரமில் 148 போ், சிக்கிமில் 87 போ், அந்தமான்-நிகோபாரில் 72 போ், மேகாலயத்தில் 47 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா்.

பாதிப்பு: 5,28,859

பலி: 16,095

மீட்பு: 3,09,712

சிகிச்சை பெற்று வருவோா்: 2,03,051

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com