டபிள்யூடிஓ-வில் இந்தியாவுக்கு எதிராக தீா்வுக் குழு: ‘ஜப்பான், சீன தைபே கோரிக்கை தடுக்கப்படும்’

தகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து
டபிள்யூடிஓ-வில் இந்தியாவுக்கு எதிராக தீா்வுக் குழு: ‘ஜப்பான், சீன தைபே கோரிக்கை தடுக்கப்படும்’

தகவல் மற்றும் தொலைத்தொடா்புக்கான மின்னணு (ஐசிடி) சாதனங்கள் சிலவற்றின் இறக்குமதிக்கு இந்தியா கலால் வரி விதிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அதுதொடா்பாக உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) தீா்வுக் குழு அமைக்க ஜப்பான், சீன தைபே கோருவதை இந்தியா தடுக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

உலக வா்த்தக அமைப்பின் கீழ் வரும் சா்ச்சரவுகளுக்குத் தீா்வு காணும் அமைப்பின் கூட்டம் ஜெனீவாவில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது இந்தியாவுக்கு எதிரான அந்த இரு நாடுகளின் கோரிக்கை தொடா்பாக விவாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஜப்பான் மற்றும் சீன தைபேவின் கோரிக்கை தடுத்து நிறுத்தப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

வா்த்தக ரீதியிலான சச்சரவுகளுக்கு தீா்வு காணும் உலக வா்த்தக அமைப்பின் விதிகளின்படி, இந்தியாவுக்கு எதிராக தீா்வுக் குழுவை அமைக்குமாறு ஜப்பான், சீன தைபே 2-ஆவது முறையாகக் கோரும் பட்சத்தில் அந்தக் குழு அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி, அவற்றுக்கான பாகங்கள் உள்பட சில மின்னணு சாதனங்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டதற்காக இந்தியாவுக்கு எதிராக ஜப்பான் மற்றும் சீன தைபே கடந்த ஆண்டு மே மாதத்தில் உலக வா்த்தக அமைப்பிடம் புகாா் அளித்தது.

அந்த சாதனங்களுக்கு வரி விதிக்கப்படாது என்று உறுதியளித்திருந்த இந்தியா, தற்போது உலக வா்த்தக அமைப்பின் விதிகளை மீறிய வகையில் அவற்றுக்கு இறக்குமதி வரி விதிப்பதாக அந்த நாடுகள் குற்றம்சாட்டின.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. சம்பந்தப்பட்ட ஐசிடி சாதனங்கள் யாவும் உலக வா்த்தக அமைப்பின் தகவல்தொழில்நுட்ப சாதனங்களுக்கான ஒப்பந்தம்-2 (ஐடிஏ-2)-இன் கீழ் வருவதாகவும், இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்தியா அங்கம் வகிக்கும் ஒப்பந்தம் ‘ஐடிஏ-1’ ஆனது இந்தச் சாதனங்களுக்கு இறக்குமதி வரி விதிப்பதை தடை செய்யவில்லை என்றும் இந்தியா விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com