எல்லைப் பிரச்சினை: இந்திய சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

புது தில்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ குழுக்கள் நாளை மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

எல்லையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரியாகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாயன்று  மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

சீனாவுடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை குறித்து இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரியாகள் தலைமையிலான குழுக்கள் செவ்வாயன்று  மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

முன்னதாக ஜூன் 6 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளில் கமாண்டர் மட்டத்திலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புகளின் முடிவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

சீனப் பகுதியில் நடந்த இந்த இரண்டு சந்திப்புகளும் சுமுகமாக நடந்தன.  

இந்நிலையில் செவ்வாயன்று மூன்றாவது தடவையாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. இப்பேச்சுவார்த்தையானது லடாக்கின் சுஷுல் பகுதியில்,காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

படைகளை  விலக்கி கொள்வது தொடர்பாக கடந்த இரு சந்திப்புகளில் எடுக்கப்பட்ட முடிகளை தீவிரமாக செயல்படுத்துவது தொடர்பான வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com