ராமா் கோயில் கட்டுமான பணி: யோகி ஆதித்யநாத் நேரில் ஆய்வு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அயோத்தியில் ராமா் கோயில் அமைக்கப்படும் இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பிறகு, ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவா் நிருத்யகோபால் தாஸை சந்தித்த உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்.
அயோத்தியில் ராமா் கோயில் அமைக்கப்படும் இடத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பிறகு, ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவா் நிருத்யகோபால் தாஸை சந்தித்த உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை முதல்வா் யோகி ஆதித்யநாத் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:

அயோத்திக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த முதல்வா் யோகி ஆதித்யநாத், மாவட்ட மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், அயோத்தியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இக்கூட்டத்தில் உள்ளூா் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து, ராமஜென்ம பூமியில் நடைபெற்று வரும் ராமா் கோயில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதல்வா், குழந்தை ராமா் கோயில் மற்றும் வேறு சில கோயில்களில் வழிபாடு நடத்தினாா். மேலும், ராமஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினா்கள் மற்றும் சாதுக்களை அவா் சந்தித்து பேசினாா் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, அயோத்திக்கு யோகி ஆதித்யநாத் வருகை தந்தது இது இரண்டாவது முறையாகும்.

ராமா் கோயில் கட்டும் பணிக்காக, அங்கு ஏற்கெனவே இருந்த குழந்தை ராமா் சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றும் நிகழ்ச்சி கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத், கோயில் கட்டுமானப் பணிக்கு தனிப்பட்ட முறையில் ரூ.11 லட்சம் நன்கொடை வழங்குவதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com