உ.பி.யில் காய்ச்சல் பாதித்த குழந்தை மரணம்; மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என தந்தை புகார்

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில், உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் உடலை கட்டிப்பிடித்த அழுது கொண்டிருக்கும் பெற்றோரின் புகைப்படம் மனதை உலுக்குவதாக உள்ளது.
உ.பி.யில் காய்ச்சல் பாதித்த குழந்தை மரணம்
உ.பி.யில் காய்ச்சல் பாதித்த குழந்தை மரணம்


கன்னௌஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் கன்னௌஜ் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில், உயிரிழந்த ஒரு வயது குழந்தையின் உடலை கட்டிப்பிடித்த அழுது கொண்டிருக்கும் பெற்றோரின் புகைப்படம் மனதை உலுக்குவதாக உள்ளது.

காய்ச்சல் பாதித்து ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட தனது ஒரு வயது மகனை, எந்த மருத்துவரும் வந்து பார்க்கவில்லை என்று கண்ணீரோடு முறையிடுகிறார்.

பிரேம்சந்த், மிஷ்ரிபுர் கிராமத்தைச் சேர்ந்த நபர், காய்ச்சல் பாதித்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். ஆனால், அங்கு 45 நிமிடத்துக்கு மேல் காத்திருந்தும் ஒரு மருத்துவர் கூட வந்து பார்க்கவில்லை. கான்பூர் செல்லுமாறு எங்களை துரத்தினர். ஆனால் என்னிடம் காசும் இல்லை. நானோ ஒரு ஏழை, எவ்வாறு மகனை கான்பூர் அழைத்துச் செல்வது என்று கதறும் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பார்ப்போர் மனதை உலுக்குகிறது.

இது குறித்து கன்னௌஜ் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரி கூறுகையில், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அரை மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் தந்தை கூறும் புகாரில் உண்மையில்லை என்று மறுத்துள்ளார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com