கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு? அமைச்சர் தகவல்

கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.  

பனாஜி: கோவாவில் நாளை முதல் மதுபான விடுதிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.  

கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் மாநில அமைச்சர்களின் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில துறைமுகங்கள் துறை அமைச்சர் மைக்கேல் லோபோ கூறியதாவது:

கோவாவில் உள்ள மதுபாதுன விடுதிகள் நாளை முதல் திறக்கபப்ட வேண்டும். உணவுக் கூடங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால் யாரும் வருவதாகத் தெரியவில்லை. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளதே காரணம். பெரும்பாலான கோவா மக்கள் உணவுடன் ஒரு பீர் அருந்தவோ அல்லது இரவு உறங்கச் செல்லும் முன் ஒரு பெக் மது அருந்தவோ விரும்புவார்கள்.  

மதுபான விடுதிகளுடன் கூடிய உணவகங்களை இயங்கச் செய்வது என்பது, சுற்றுலா நடவடிக்கைகளை மாநிலத்தில் ஊக்குவிக்க நல்லதொரு முன்மாதிரியாக அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com