Enable Javscript for better performance
ஹுரியத் மாநாடு அமைப்பிலிருந்து சையது அலி கிலானி விலகல்- Dinamani

சுடச்சுட

    

    ஹுரியத் மாநாடு அமைப்பிலிருந்து சையது அலி கிலானி விலகல்

    By DIN  |   Published on : 30th June 2020 02:19 AM  |   அ+அ அ-   |    |  

    சையது அலி கிலானி

    சையது அலி கிலானி


    ஸ்ரீநகர்: ஹுரியத் மாநாடு அமைப்பிலிருந்து விலகுவதாக பிரிவினைவாதத் தலைவர் சையது அலி கிலானி திங்கள்கிழமை அறிவித்தார். காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளில் முக்கிய தலைவராக கிலானி அறியப்படுகிறார்.

    ஜம்மு-காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் பல்வேறு அரசியல், சமூக, மத அமைப்புகளை ஒருங்கிணைத்து ஹுரியத் மாநாடு அமைப்பு கடந்த 1993-இல் தொடங்கப்பட்டது. இதன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் கிலானி ஆவார். 

    இந்த அமைப்பில், கடந்த 2003-ஆம் ஆண்டில் பிளவு ஏற்பட்டு, கிலானி தலைமையில் ஒரு பிரிவு செயல்பட தொடங்கியது. பிரிவினைவாத கொள்கையில் தீவிர அணுகுமுறை கொண்ட இப்பிரிவின் நிரந்தர தலைவராக கிலானி நியமிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், ஹுரியத் மாநாடு அமைப்பிலிருந்து முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தற்போது 90 வயதாகும் கிலானி, தனது முடிவுக்கான காரணம் தொடர்பாக ஹுரியத் மாநாட்டில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினருக்கும் விரிவான கடிதத்தை எழுதியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஹுரியத் மாநாடு உறுப்பினர்களின் செயல்பாடுகள், அங்குள்ள அரசில் இடம்பெற முயற்சிப்பது என்ற அளவில் சுருங்கிவிட்டது. அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு, அவை விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

    இதர சில உறுப்பினர்கள் தனியாக கூட்டங்களை நடத்துகின்றனர். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து உறுப்பினர்களுக்கும் பல்வேறு வழிகளில் தகவல் அனுப்பினேன். ஆனால், எனது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிட்டன. எனது அறிவுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தங்களது வரம்புகளை கடந்து, தலைமைக்கு எதிரான செயல்பாடுகளில் உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர் என்று தனது கடிதத்தில் கிலானி குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. 

    இதையடுத்து, முக்கிய அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp