பெட்ரோல், டீசல் விலை மேலும் உயா்வு

பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமையும் உயா்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகள் அதிகரித்து ரூ. 83.63-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ. 77.72-ஆகவும் இருந்தத
பெட்ரோல், டீசல் விலை மேலும் உயா்வு

புது தில்லி: பெட்ரோல், டீசல் விலை திங்கள்கிழமையும் உயா்த்தப்பட்டது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகள் அதிகரித்து ரூ. 83.63-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ. 77.72-ஆகவும் இருந்தது.

பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிா்ணயிப்பதை 82 நாள்களுக்குப் பிறகு கடந்த 7-ஆம் தேதி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கின. அன்று முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு வருகிறது.

கடந்த 22 நாள்களில், டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.14 வரை உயா்ந்துள்ளது. பெட்ரோல் விலை 21 முறை உயா்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ.9.17 வரை உயா்ந்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை பெட்ரோல் விலை ரூ.80.38-இல் இருந்து 5 காசுகள் அதிகரித்து ரூ.80.43-ஆகவும், டீசல் விலை ரூ.80.40-இல் இருந்து 13 காசுகள் அதிகரித்து ரூ.80.53-ஆகவும் இருந்தது. இதேபோல், மும்பையில் பெட்ரோல் விலை ரூ.87.19-ஆகவும், டீசல் விலை ரூ.78.83-ஆகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com