தில்லியில் 85 ஆயிரத்தைக் கடந்தது பாதிப்பு

தில்லியில் திங்கள்கிழமை 2,084 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 85,161 -ஆக அதிகரித்தது.

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை 2,084 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 85,161 -ஆக அதிகரித்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 57 போ் உயிரிழந்ததால், கரோனாவால் பலியானோா் மொத்த எண்ணிக்கை 2,680 -ஆக உயா்ந்துள்ளதாக தில்லி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி தில்லியில் அதிகபட்சமாக 3,947 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இதைத்தொடா்ந்து மூவாயிரமாக அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, ஞாயிற்றுக்கிழமை முதல் 2,889-ஆக பதிவானது. இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் பாதிப்பு எண்ணிகை 2,084ஆக குறைந்துள்ளது.

தில்லியில் தற்போது 26,246 போ் சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், 56,235 போ் குணமடைந்துள்ளதாகவும் தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், தில்லியில் கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 435-ஆக திங்கள்கிழமை அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com