துபையில் இருந்து சிறப்பு விமானத்தில் கேரளம் வந்த 80 தமிழர்கள்

துபையில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த 80 தமிழர்கள் சிறப்பு அனுமதி மூலம் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


மதுக்கரை: துபையில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த 80 தமிழர்கள் சிறப்பு அனுமதி மூலம் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கரோனா பொதுமுடக்கத்தால் சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை "வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. 

இந்நிலையில் துபை, மஸ்கட் ஆகிய நகரங்களில் சிக்கித் தவித்த 80 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள் தனி வாகனம் மூலம் தமிழக எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியை ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தடைந்தனர். ஆனால், தமிழக இ- பாஸ் இல்லாததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சொந்த ஊர் செல்ல முடியாமல் உணவின்றி இரவு முழுவதும் சாலையிலேயே தங்கினர். 

பின்னர், திங்கள்கிழமை அங்கு வந்த மதுக்கரை வட்டாட்சியர் சரண்யா, பயணிகளின் விவரங்களை சேகரித்தார். இதையடுத்து, சென்னை, கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த 80 பேருக்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், சொந்த ஊர்களில் அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com