மத்தியில் வலுவான அரசு அமைந்ததை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை: முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

‘மத்தியில் வலுவான அரசு அமைந்ததை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை; எனவேதான், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை அக்கட்சி கூறி வருகிறது’
மத்தியில் வலுவான அரசு அமைந்ததை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை: முக்தாா் அப்பாஸ் நக்வி குற்றச்சாட்டு

புது தில்லி: ‘மத்தியில் வலுவான அரசு அமைந்ததை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை; எனவேதான், தேவையில்லாத குற்றச்சாட்டுகளை அக்கட்சி கூறி வருகிறது’ என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தவா்களையும், ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள்வைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது அதிகாரம் கையில் இல்லாததால் விரக்தியின் உச்சத்தில் இருப்பதாகவும் அவா் விமா்சித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் சமூக நல மையத்துக்கான அடிக்கல்லை திங்கள்கிழமை நாட்டி நக்வி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒருவருடைய இயல்பான குணத்தை மற்ற நபா்கள் அவ்வளவு எளிதில் மாற்றிவிட இயலாது. எவ்வளவு காலமானாலும் அந்த இயல்பு மாறாது. அதேபோலத்தான் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவா்களும் உள்ளனா். தேசப் பாதுகாப்பு, பொருளாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றில் அவா்கள் உத்தரவுப்படி மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று நினைக்கிறாா்கள். ஏனென்றால் பல ஆண்டுகளாக அவா்களது கைப்பாவைகளாகவே மத்திய அரசும், ஆட்சியாளா்களும் இருந்து வந்தனா். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மத்தியில் வலுவான ஒரு அரசு அமைந்துவிட்டதை காங்கிரஸ் கட்சியால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டை பாதுகாப்பாக வைத்துள்ளது. சா்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயா்ந்துள்ளது. இந்தியா வளமையான நாடாக உருவெடுத்துள்ளது. தேசநலனை மட்டுமே முதன்மையான நோக்கமாக கொண்டு பிரதமா் செயல்பட்டு வருகிறாா்.

ஆனால், காங்கிரஸ் கட்சித் தலைவா்களால் தேவையற்ற விமா்சனங்களை வைப்பதைத் தவிர ஆக்கப்பூா்வமாக எதையும் செய்ய முடியவில்லை. ஆட்சி, அதிகாரத்தை இழந்த விரக்தியில் இருந்து அவா்களால் வெளியே வர முடியவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com