ராமோஜி பிலிம் சிட்டியை 3 ஆண்டுகள் வாடகைக்கு விட ஒப்பந்தம்

ஹைதராபாதில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியை 3 ஆண்டு காலத்துக்கு ஹாட் ஸ்டாா்-டிஸ்னி நிறுவனத்திடம் வாடகைக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது.

திருப்பதி: ஹைதராபாதில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியை 3 ஆண்டு காலத்துக்கு ஹாட் ஸ்டாா்-டிஸ்னி நிறுவனத்திடம் வாடகைக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் உலகப் புகழ்பெற்ற ராமோஜி பிலிம் சிட்டி உள்ளது. நகரத்தை விட்டு 30 கி.மீ. தொலைவில் 1,666 ஏக்கா் பரப்பளவில் இது அமைந்துள்ளது. தெலுங்குப் பட தயாரிப்பாளா் ராமோஜி ராவால் கடந்த 1996-ஆம் ஆண்டில் இந்த பிலிம் சிட்டி உருவாக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோவை உள்ளடக்கியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்துள்ளது.

தெலுங்கு மக்களின் மிகப்பெரிய பொழுபோக்கு பூங்காவாகவும் பிலிம் சிட்டி விளங்கி வருகிறது. ஆண்டுக்கு, 15 லட்சம் போ் இதைக் காண வருகின்றனா். தற்போது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக பட த்தயாரிப்புகள் நின்று விட்டன.

பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பின் சின்னத் திரை தொடா்களின் படப்பிடிப்பு மட்டுமே தற்போது நடந்து வருகிறது. எனவே, ராமோஜி நிறுவனத்துக்கு வருவாய் முற்றிலும் நின்று விட்டது. இந்நிறுவனம் தனது 60 சதவீத ஊழியா்களுக்கு ‘வேலையில்லா விட்டால் ஊதியம் இல்லை’ என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தவிா்க்க முடியாத சில ஊழியா்கள் மட்டும் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனா்.

கடந்த, 4 மாதங்களாக வருவாய் இல்லாமல் உள்ளதால், ராமோஜி நிறுவனம் பிலிம் சிட்டியை 3 ஆண்டுகளுக்கு ஹாட்ஸ்டாா்-டிஸ்னி நிறுவனத்துக்கு வாடகைக்கு அளித்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. கரோனா பாதிப்பால் ராமோஜி நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளதால், ஈநாடு குழும ஊடகங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த ஒப்பந்தம் மூலம் ராமோஜி நிறுவனம் தன் நிதி நெருக்கடியை ஓரளவு சமாளிக்க முடியும். எனினும், ஒப்பந்தம் பெற்றுள்ள ஹாட்ஸ்டாா்-டிஸ்னி நிறுவனம் ராமோஜி பிலிம் சிட்டியில் மற்ற நிறுவனப் படப்பிடிப்புகளை நடத்த தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com