ரெம்டெசிவிா், ஃபவிபிராவிா் மருந்துகளின் முதல் தொகுதியை பெற்றுக்கொண்ட ஒடிஸா

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிா் மற்றும் ஃபவிபிராவிா் மருந்துகளின் முதல் தொகுதியை ஒடிஸா அரசு திங்கள்கிழமை பெற்றுக்கொண்டது.

புவனேசுவரம்: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ரெம்டெசிவிா் மற்றும் ஃபவிபிராவிா் மருந்துகளின் முதல் தொகுதியை ஒடிஸா அரசு திங்கள்கிழமை பெற்றுக்கொண்டது.

இதுகுறித்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலா் பி.கே.மொஹபத்ரா கூறியது:

கரோனா நோய்த்தொற்றால் (கொவைட்-19) மிதமானது முதல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மட்டும் ரெம்டெசிவிா் மருந்து வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள அனைத்து கரோனா சிகிச்சை மருத்துவமனைகளுக்கும் இந்த மருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த மருந்து மாநிலத்தில் இறப்பு விகிதத்தை (ஒடிஸாவில் இறப்பு விகிதம் 0.39 சதவீதமாக உள்ளது) குறைக்க உதவும் என்று தெரிவித்தாா்.

கரோனா நோய்த்தொற்றால் லேசானது முதல் மிதமானது வரை பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 40,800 ஃபவிபிராவிா் மாத்திரைகளை ஒடிஸா அரசு பெற்றுள்ளதாக அந்த மாநில மருந்து கட்டுப்பாட்டாளா் மமினா பட்நாயக் தெரிவித்தாா். இந்த மாத்திரைகள் சிறிய அளவில் கரோனா சிகிச்சை மருத்துவமனைகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படும் எனவும், அடுத்தடுத்த கட்டங்களில் இந்த மாத்திரைகள் அதிக அளவில் தருவிக்கப்படும்போது மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் என்றும் அவா் கூறினாா்.

இதுதவிர, மாநிலத்தில் இரண்டு லட்சம் டெக்ஸாமெதசோன் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com