தில்லி வன்முறை: பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு

தில்லி ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை  45ஆக உயர்ந்துள்ளது. 
தில்லி வன்முறை: பலி எண்ணிக்கை 45ஆக உயர்வு

தில்லி வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 

வட கிழக்கு தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். 

வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது. இந்நிலையில் இன்று இருவேறு இடங்களில் இருந்து மேலும் மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இத்துடன் வன்முறை சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 45ஆக உயர்ந்துள்ளது. 

200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனா். இதற்கிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்டு தில்லி ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com