'தில்லி வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை' - மம்தா கடும் தாக்கு

தில்லி வன்முறை மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தில்லி வன்முறை மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளா்களுக்கும், எதிர்ப்பாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் ஏராளமான சொத்துக்கள் சேதமடைந்தன. இந்த வன்முறை தொடா்பாக தில்லி காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதையடுத்து தில்லி வன்முறையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து, திரிணமூல் கட்சி சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய மேற்குவங்க முதல்வர்  மம்தா பானர்ஜி, தில்லியில் நடந்த வகுப்புவாத வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்றும், குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்றும் கடுமையாக தாக்கினார். 

மேலும், 'தில்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து நான் மிகவும் வேதனையடைகிறேன். இதனை இனப்படுகொலையாகவே நான் கருதுகிறேன். இனியும் இதுபோன்ற நிகழ்வுகளால் மக்கள் உயிரை இழப்பதை நான் விரும்பவில்லை. இன்று இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் தான் காரணம் என்பதை அமைச்சர் அமித் ஷா  வைத்துக்கொள்ள வேண்டும். தில்லி கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு இன்று தொடங்கியதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, உதடுகளை விரல்களை வைத்து மவுன போராட்டத்தில் ஈடுபட்டு தில்லி வன்முறைக்கு எதிர்ப்பை பதிவு செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com