உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: கேஜரிவால் அறிவிப்பு

வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி: கேஜரிவால் அறிவிப்பு


புது தில்லி: வடகிழக்கு தில்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுப் பிரிவு அதிகாரி அங்கித் ஷர்மா குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

வடகிழக்கு தில்லியில் அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) எதிா்ப்பாளா்களுக்கும் ஆதரவாளா்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இதில் 46 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனா். வாகனங்கள், கடைகள், வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துகளும் நாசமாக்கப்பட்டன.

இந்த வன்முறையின் போது வடகிழக்கு தில்லியில் வன்முறை பாதித்த சந்த் பாக் பகுதியில் வசித்து வந்த உளவுத் துறை அதிகாரி அங்கித் சர்மா, சமூக விரோதக் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். 

அவரது உடல் அப்பகுதியில் உள்ள கழிவுநீர்க் கால்வாயில் இருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டது. இக்கொலைச் சம்பவத்தில், அப்பகுதி ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் முக்கிய பங்கு வகித்ததாக அங்கித் ஷர்மாவின் பெற்றோர் உள்பட அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் வன்முறையில் கொல்லப்பட்ட அங்கித் ஷர்மாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com