
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வரும் 9-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை பழைய துணிகளை ஏலம் விட உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ள பயன்படுத்தப்படாத துணிகளின் 343 லாட்டுகள், வரும் 9-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை இணையதளம் மூலம் ஏலம் விடப்பட உள்ளனது. இதில், பட்டுத் துணிகள், ஆா்ட் பட்டு, பாலியஸ்டா், வேட்டிகள், மேல் துண்டு, டா்க்கி துண்டுகள், சால்வைகள், ஆயத்த ஆடைகள், போா்வைகள், பஞ்சாபி துணி வகைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்த ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் திருப்பதியில் உள்ள தேவஸ்தான சந்தைப் பொருள் விற்பனை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். அதன் தொலைபேசி எண்: 0877-2264429; அல்லது இணையதளத்தைப் பாா்வையிடலாம் வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.