குடியுரிமைச் சட்டம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு இந்தியா பதில்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம், இதில் வெளிநாட்டைச் சேர்ந்த எந்த அமைப்பின் நிலைப்பாட்டையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
குடியுரிமைச் சட்டம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்துக்கு இந்தியா பதில்


புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்விவகாரம், இதில் வெளிநாட்டைச் சேர்ந்த எந்த அமைப்பின் நிலைப்பாட்டையும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு உச்ச நீதிமன்றத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மனு தாக்கல் செய்வது குறித்த விஷயத்தில் இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் நேரடியாக தனது எதிர்ப்பை திட்டவட்டமாகப் பதிவு செய்துவிட்டது.

இந்தியா தொடர்பான வழக்கில் வெளிநாட்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க முடியாது என்று மத்திய வெளியுறவு விவகாரத்துறை தெரிவித்திருக்கும் நிலையில், சிஏஏ விவகாரம் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறது.

இந்த மனு குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நேற்று இந்தியாவுக்கு தகவல் தெரிவித்திருந்ததாக இந்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் வெளிநாட்டு அமைப்பின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும், அதில், குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவ எங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறும், மனித உரிமை சார்ந்து உலக நாடுகளின் அரசுகள் கொண்டுவரும் கொள்கை முடிவுகளில் ஐ.நா. மனித உரிமை சார்பில் கருத்துகளை முன்வைக்க வழிவகை செய்து வருகிறோம். அதன் அடிப்படையிலயே இந்த மனுவும் தாக்கல் செய்யப்படுகிறது.

நிச்சயம் உள்நாட்டு விஷயத்தில் தலையிடப் போவதில்லை. புதிய கொள்கை மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறாது என்பதை உறுதி செய்வதில் மட்டுமே எங்களது கவனம் இருக்கும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட விவகாரத்தில், ஐ.நா. தலையிட வேண்டாம் என்று மத்திய அரசு தரப்பில் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் அணையத்தின் இது தொடர்பான மனு இன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com