புல்வாமா தாக்குதலில் தொடர்பு: தந்தை - மகளை  கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு

புல்வாமா தாக்குதலில் தொடா்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்க பயங்கரவாதி கைது செய்யப்பட்ட 4 நாட்களில், மேலும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.
புல்வாமா தாக்குதலில் தொடர்பு: தந்தை - மகளை  கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு


ஸ்ரீநகர்: புல்வாமா தாக்குதலில் தொடா்புடைய ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்க பயங்கரவாதி கைது செய்யப்பட்ட 4 நாட்களில், மேலும் இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) கைது செய்துள்ளனர்.

புல்வாமா பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடயதாக மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், புல்வாமா தாக்குதலில் தொடர்பிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தந்தை - மகள் என்று அறியப்படும் இரண்டு பேர் லேத்போரா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்விருவரையும் சேர்த்து இவ்வழக்கில் மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹஜிபல் கிராமத்தைச் சோ்ந்த ஷாகிா் பஷிா் மாக்ரே(22), மரச்சாமான்கள் கடை நடத்தி வந்துள்ளாா். இவா் கடந்த ஆண்டு புல்வாமாவில் சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய அடில் அகமது தாருக்கு புகலிடம் தந்ததாகக் கூறி கடந்த வாரம் பிப்ரவரி 28ம் தேதி கைது செய்யப்பட்டார். இவர்  அளித்த தகவலி அடிப்படையில் தற்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஷாகிர் பஹிர் கைது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹஜிபல் கிராமத்தைச் சோ்ந்த ஷாகிா் பஷிா் மாக்ரே(22), மரச்சாமான்கள் கடை நடத்தி வந்துள்ளாா். இவா் கடந்த ஆண்டு புல்வாமாவில் சிஆா்பிஎஃப் வீரா்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய அடில் அகமது தாருக்கு புகலிடம் தந்துள்ளாா். 2018-ஆம் ஆண்டின் மத்தியில் மாக்ரேவை பாகிஸ்தான் பயங்கரவாதி முகமது உமா் ஃபரூக், அடிலிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளாா். அதற்கு பிறகு ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்துக்கு மாக்ரே முழு நேரமும் மறைமுகமாக உதவி செய்து வந்துள்ளாா். ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்துக்கு ஆயுதங்கள், வெடிபொருள்கள், பணம் ஆகியவை கிடைக்கப்பெற பலமுறை அவா் உதவிபுரிந்துள்ளாா்.

அவ்வாறு அவா் உதவியவா்களில் புல்வாமா தாக்குதலை நிகழ்த்திய பயங்கரவாதிகளும் அடங்குவா். 2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கடந்த ஆண்டு புல்வாமா தாக்குதல் நடத்தப்படும் வரை அடில் அகமது தாா், முகமது உமா் ஃபரூக் ஆகியோரை தனது வீட்டில் தங்கவைத்துள்ளாா். அவா்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பிலும் உதவியுள்ளாா். இவரது கடை லேத்போரா பாலத்தையொட்டி இருப்பதால், ஃபரூக் அறிவுறுத்தியபடி கடந்த ஆண்டு ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலையில் சிஆா்பிஎஃப் வீரா்களின் வாகனங்களை தொடா்ந்து கண்காணித்து வந்து, அதுபற்றிய தகவல்களை ஃபரூக், அடில் அகமது ஆகியோரிடம் தெரிவித்துள்ளாா். புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் வடிவமைப்பை மாற்றி, அதில் வெடிகுண்டை பொருத்தவும் மாக்ரே உதவியுள்ளாா் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

15 நாள் என்ஐஏ காவல்:

ஜம்முவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் மாக்ரே ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 15 தினங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகளுக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் சிஆா்பிஎஃப் வாகனங்கள் மீது ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத இயக்கத்தைச் சோ்ந்த அடில் அகமது தாா் தற்கொலை தாக்குதல் நடத்தினாா். இதில், 40 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com